சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1639 ஆக உள்ளது. மேலும் 79 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 93,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,542 ஆக உயர்வு. மாவட்டத்தில் 588 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5,208 பரிசோதிக்கப்பட்டதில் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி வையுங்கள் 531 ஆக 26 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கூடுதல் தடுப்பூசி சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 16 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 248 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 26,519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,003 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 1830 பரிசோதிக்கப்பட்டதில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 27 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 332 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,198 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1426 பரிசோதிக்கப்பட்டதில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.