சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன் மனைவி மைகளி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவருக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் அவரது பெற்றோர்களால் கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த நிலையில், மூத்த மகள் மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. 



இதனால் பெற்றோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தன்னால் மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், எனக்கு பின்னால் உள்ள தம்பி தங்கையை காப்பாற்ற பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் நினைத்து நேற்று காலை பள்ளிக்கு சென்றவள் மீண்டும் காலை 10 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. பெற்றோர்களும் வேலைக்கு சென்றதால் தனிமை பயன்படுத்தி என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் இல்லை. என்னால் ஆண்டுக்கு ஒரு முறையாவது தனது பெற்றோருக்கு செலவு தற்பொழுது இருக்காது. அதனால் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 



வேலைக்கு சென்று விட்டு பிற்பகல் வீடு திரும்பிய தாய் மைகளி வீட்டின் கதவு உள்புறமாக கூட்டி இருந்துள்ளது. இதனை எடுத்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்க்கும் போது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்த தனது மகளை பார்த்து அலறியதால் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களின் உதவியோடு மகளை இறக்கி பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்ததால் உடனடியாக பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை எடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பூலாம்பட்டி காவல் துறையினர் 11 வகுப்பு மாணவி உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதிக்க அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)