திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி, பெண்களின் இடுப்பு அளவு பெருத்துவிட்டது போன்ற அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது, இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” எனப் பதிவிட்டுள்ளார்.