தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பாக சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில், அங்கு அவருக்கு ஆதரவாக அவரது 10 வயது மகள் அனன்யா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது  மக்களிடம் பேசிய அவரின் மகள், “தினமும் விஜயபாஸ்கர் உங்களுக்காகவே உழைக்கிறார். உங்களுக்கு ஏதாவது என்றால், அவர் துடித்துபோய்விடுவார். உங்களுக்கு காது கேட்கவில்லை என்றால் காது மிஷினாக இருப்பார். கண் தெரியாவிட்டால் கண்ணாடியாக வருவார். கொரோனா என்றால் மருந்தாக வருவார். விஜயபாஸ்கர் உங்க வீட்டு பிள்ளை. அவரை நீங்கள் பெற செய்ய வேண்டும்” என்று பேசினார். சிறுமியுடன் நடிகை விந்தியாவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.