சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் "மலைகளின் வளமே மண்ணின் வளம்" என்ற தலைப்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, நாட்டின் வலம் நாட்டில் உள்ள மலைகளை பொறுத்தது. மலை இருந்தால் தான் மழை பெய்யும். மலை இல்லையெனில் மழை பெய்யாது. இது பற்றி நான் தானே பேச வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் இதற்கு விவசாயிக்கு வாக்களியுங்கள். 5 ஆண்டு என்னிடம் கொடுத்து பாருங்கள். நாட்டை காப்பாற்றி காட்டுகிறேன்" என்றார். 



உன்னால் உருவாக்க முடியாத போது அழிக்க மட்டும் யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார். மலை உயரச் செய்ய முடியுமா? முடியாது?. பூமியை அழித்து கொண்டிருக்கிறார்கள். வாழ ஒரே ஒரு பூமிதான் உண்டு. ஆற்றை உருவாக்கியது யார்? மலைகள் தான். இதை மானுட சமூகம் மறந்து விட்டது. 32 ஆறுகள் தமிழகத்தில் உள்ளது. இதில் மணலை காலி செய்து விட்டனர். இதனால் எம் சாண்டை தயாரிக்கிறார்கள். இதனால் மலையை குடைகிறார்கள். மனிதனுக்கு தோல் முக்கியம். அது போல் ஆற்றுக்கு மணல் முக்கியம். தலைசிறந்த தேக்கி மணல் தான். ஆனால் இதை அள்ளுகிறார்கள் 3 அடி அள்ள வேண்டும் ஆனால் 30 அடி அன்றுகிறார்கள். ஏன் அரசு முறைப்படுத்தவில்லை. 3 அடி எடுத்து ஏன் வினியோகித்து இருக்க கூடாது. இன்னும் 25 ஆண்டுகளில் மலையை எடுத்து விட்டால் பிறகு என்ன செய்வீர்கள். இது பற்றி எல்லாம் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமா பேசுவார்கள். எல்லாமே காசா? நடந்துடுச்சே. காப்பாற்றனும் என எண்ணுகிறேன். ஒரே ஒரு ஓட்டை போட்டுங்க, உண்மையின்னு நினைச்சா எனக்கு ஓட்டு போடுங்க. மணலை உருவாக்க முடியாது. போன் செய்தால் எல்லாம் வருது. எத்தனை நாளைக்கு வரும். பிறகு என்ன செய்வீங்க என்றார்.



”ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாரு என்கிறார்கள். ஒரு நாளைக்கு 30 ரூபாய் தராங்க. ஆயிரம் ரூபாய் கொடுத்து குவாட்டர் விலை ஏத்திட்டாங்க. நீங்க ஆட்சி நடத்தறீங்க. நான் பேசுவது நக்கலா இருக்கும். நாங்களும் பேசலைனா வேறு யார் பேசுவாங்க. மலை இல்லாத பகுதி பாலைவனமாக மாறிவிடும். மழை பொழிய மலை இருக்கனும். இவற்றை காப்பாற்றனும். இதற்கு ஒரு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றனும். எல்லா வளத்தையும் காப்பாற்ற நாம் வெற்றி அடையனும். இப்படி வேறு கட்சி பேசுதா? சொல்லுங்க அவங்களுடன் நான் கூட்டணி வைத்து கொள்கிறேன். ஊழல் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இழந்து விட்ட உரிமைகளை போராடி பெற வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வந்துடுவேன். நான் வருவேன். உட்காருவேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது. வென்று பல பேரை கொல்வேன். மலைகளை நேசி. குழந்தைகளுக்கு மலைகளை நேசிக்க கற்று கொடுங்கள். எனக்கு ஓட்டு போடாமல் யாருக்கு ஓட்டு போடுவீர்கள். மலைகள் தகர்ப்பதை தடுக்கணும். இதற்கு வழி விவசாய சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என பேசினார்.