சசிகலாவை பொதுச்செயலாளராக்கியது ஏன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். 


இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம் “சசிகலா அப்போது தற்காலிக பொதுச்செயலாளராகவே தேர்தெடுக்கப்பட்டார். ஒற்றைத்தலைமை பிரச்சினையை எழுப்பியவர்களை எடப்பாடி பழனிசாமிதான் கண்டிக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு தொண்டர்கள்தான் காரணம். ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா என்று தனது கருத்தை எடப்பாடி தான் கூற வேண்டும். அதிமுகவில் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவியில் வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். ஒற்றைத்தலைமை பிரச்சினை எப்படி உருவானது என எனக்கே தெரியாது ஜெயக்குமார் அளித்த பேட்டியால் ஒற்றைத்தலைமை பிரச்சினை பூதாகரமாக மாறியது. 


இரட்டை தலைமையில் அதிமுக நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தேர்தலில் கூறிவிட்டார்கள். பொதுக்குழுவை சுமூகமாக நடத்திவிட்டு அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து 14 பேர் கொண்ட குழு முடிவு செய்யட்டும்” என்றார்.