தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது இளமை பருவம் எப்படி இருந்தது மற்றும் இவர் ஏன் ஆண்களை வெறுத்தார் எனவும்  பேராசிரியரும், மொழி பெயர்ப்பாளருமான ராஜேஸ்வரி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். எம்ஜிஆர் தொடர்பாகவும் அவருடன் பயணித்தவர்கள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து புத்தகங்களை வெளியிட்டு வரும் முனைவர். ராஜேஸ்வரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஜெயலலிதா தொடர்பாகவும், எம்ஜிஆருடன் அரசியலில் ஜெயலலிதா இணைந்த கதை தொடர்பாகவும் பேசியுள்ளார்.



கசப்பான இளம்பருவம் :


ஜெயலலிதா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். அவரது அம்மா ஒரு சினிமா நடிகை என்பது நாம் அறிந்ததுதான். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சிறந்த வீணை வாசிப்பாளர் . ஜெயலலிதாவின் அம்மா இரண்டாவது மனைவி . கலை ஆர்வம் கொண்ட அப்பா இரவு முழுவதும் அம்மாவை வீணை வாசிக்க சொல்வாராம் .போதும் என்னால் முடியவில்லை என்றால் அவரது புடவைகளை தீயிட்டு கொளுத்திவிடுவாராம். இப்படியான இன்னல்களை சந்தித்தே தனது குழந்தைகளை வளர்த்திருக்கிறார் சந்தியா. ஜெயலலிதா இரண்டு வயது குழந்தையாக இருந்த பொழுது அவரது தந்தை மறைந்துவிட்டார். அதன் பிறகு சென்னைக்கு குடும்பத்துடன் வந்து பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார். அம்மா அவ்வபோது குண்ச்சித்திர நடிகையாக நடித்து வந்துள்ளார். அம்மா நடிகை என்பதாலேயே அம்மு பள்ளிகளில் புறக்கணிக்கப்படிருக்கிறார். 




சினிமாவும் அரசியலும்:


ஜெயலலிதாவின் அண்ணன் தனது குடும்பத்திற்கு உதவுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மதுவுக்கு அடிமையாகி பொறுப்பில்லாமல் இருந்த நிலையில் ஜெயலலிதா நடிக்க வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் இருந்தே எந்த ஆண்களையும் திறமையான , ஆளுமை மிக்கவராக பார்த்திடாத ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆரின் பண்பும் குணங்களும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதே போலத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவை பார்த்து வியந்திருக்கிறார். ஜெயலலிதா அரசியல் , புரட்சி சார்ந்த புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு வியப்பாக இருந்திருக்கிறது. பிறகு தனது கட்சியில் சேர்த்துக்கொண்டார். அதில் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குறிய ஆளாக மாறி , எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு தன்னை தானே அரசியல் வாரிசாக மாற்றிக்கொண்டார். அவரை ஒரு போதும் எம்.ஜி.ஆர் அரசியல் வாரிசு என அறிவித்தது கிடையாது. அதே போல பதவி எனக்கு தங்கத்தட்டில் வரவில்லை நான் போராடி பெற்றேன் என ஜெயலலிதாவும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.




ஆண்களை வெறுக்க காரணம் :



தனது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆண்கள் மீது இயற்கையாகவே இருந்த கோபம்தான் அவர் தனது ஆட்சியில் அமைச்சர்களை அடக்கி ஆண்டதன் வெளிப்பாடு என்கிறார் முனைவர் ராஜேஸ்வரி. எம்.ஜி.ஆருக்கு யாரும் காலில் விழுவது பிடிக்காது. ஆனால் ஜெயலலிதா அதனை தடுக்கவில்லை. காரணம் இது தனிப்பட்ட நபருக்கு கொடுக்கும் மரியாதை என அவர் நினைக்கவில்லை. பதவிக்கு கொடுக்கும் மரியாதை , நாளை பதவி இல்லையென்றால் யாரும் இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள மாட்டார்கள் என அவர் நன்கு கணித்து வைத்திருந்தார் . அது போலத்தானே நடந்தது என்கிறார் ராஜேஸ்வரி .