தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டிவிட்டரில் மீண்டும் வார்த்தைபோரில் ஈடுப்பட்ட பதிவுகள் வைரலாகி வருகிறது.


பிடிஆர் கார் மீது காலனி வீசிய சம்பவம்


கடந்த ஆகஸ்டு 11ம் தேதி ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டபோது, அவரது கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன் பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைத்தலத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.






பிடிஆர் பதிவு


இந்நிலையில் இந்த ஆடியோ தொடர்பாக பதிலளித்த அண்ணாமலை அந்த ஆடியோ தன்னுடையது தான் என்றும் ஆனால் அதில் சில வார்த்தைகளை திமுகவினர் நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர். தன் டிவிட்டர் பக்கத்தில், "நான் பெயரைக்கூட சொல்லமாட்டேன்" என்று ஆடு எமோஜியை பதிவிட்டு அண்ணாமலை குறித்து பதிவிட்டார். 


தொடர்புடைய செய்திகள்: ‘தளபதி 67’ -ல் விஜயின் ஹியூமருக்கு கேரண்டி.. லோகேஷூடன் இணைந்த முக்கிய பிரபலம்.. வைரலாகும் போட்டோ!


சாபக்கேடு


மேலும் அவர், "தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீசுவது, அப்பட்டமாக பொய் பேசுவது, அரசியல் லாபத்திற்க்காக மக்களின் உணர்ச்சியை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் இவர் தமிழ்ச் சமூகத்திற்க்கும் பாஜகவிற்க்கும் சாபக்கேடு" ,என்று அண்ணாமலையை கடுமையாக சாடியிருந்தார். காலனி வீச்சு சம்பவம் தொடர்பாக புகைப்படங்களையும், செய்தி குறிப்புகளையும் அந்த டீவீட்டில் இணைத்திருந்தார்.










அண்ணாமலை பதில் பதிவு


இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் “மிஸ்டர் பிடிஆர்… உங்கள் பிரச்சினை இது தான்.


முன்னோர்களின் இன்ஷியலை பயன்படுத்தி மட்டுமே வாழும் உங்களாலும், உங்கள் கூட்டாளிகளாலும் பெருமையுடன் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மகன் சுயமாக வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். பெரிய பரம்பரையில் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறெதாவது பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்களா? நீங்கள் அரசியலுக்கும் தமிநாட்டிற்கும் சாபக்கேடு. பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக, நீங்கள் என் செருப்பிற்கு கூட தகுதியில்லாதவர். உங்கள் அளவிற்கு தரம் தாழ்ந்து செயல்படமாட்டேன், கவலைவேண்டாம்", என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.