தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வும் போட்டியிடுகின்றனர்.விருத்தாச்சலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராதாகிருஷ்ணன் என்பவரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று நீதிராஜன் என்பவர் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்பாளர் ஒருவர், வேட்புமனு தாக்கல் செய்தவர் ஒருவர் : என்ன நடக்கிறது காங்கிரசில்?
ABP Tamil | 17 Mar 2021 12:56 PM (IST)
விருத்தாச்சலத்தில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு பதில் வேறு நபர் காங்கிரஸ் வேட்பாளர் என்று மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ks_alagiri_-_stalin
Published at: 17 Mar 2021 12:56 PM (IST)