நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம், தனது அறிவிக்கப்படாத கட்சியின் பொறுப்பாளராக அர்ஜூனாமூர்த்தியை நியமித்தார். ஆனால், தனது உடல்நலம் காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார். 
இதையடுத்து, அர்ஜூனாமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். மேலும், தனது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். 




இந்த சூழலில், சட்டசபை தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியில்லை என்று அர்ஜூனாமூர்த்தி அறிவித்துள்ளார். களப்பிரச்சாரத்திற்கு போதிய அவகாசம் இல்லாமல் குறைவான காலமே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை அடிப்படையில் கட்சியை வளர்த்தெடுப்போம் என்றும் அர்ஜூனாமூர்த்தி தெரிவித்துள்ளார்.