தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் களம் காண்கிறது. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யத்தினருடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை ஒதுக்கியுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதையடுத்து, 70 நபர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாம் கட்டமாக 140 நபர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 




இந்த சூழலில், இன்று மக்கள் நீதிமய்யத்தின் 24 நபர்கள் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதன்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் சார்லி என்பவர் போட்டியிடுகிறார். நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.எம்.சரீப் போட்டியிடுகிறார். அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் குணசேகரன் போட்டியிடுகிறார். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.