தற்போதைய அரசியல் பரபரப்பில் தவிர்க்க முடியாத நபராக சசிகலா உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைய இருந்த நிலையில் சசிகலா உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் தண்டனை காலமும் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் முடிவடைந்தது. இதையடுத்து, சிறையில் இருந்து புறப்பட்ட சிறை அதிகாரிகள், சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, சென்று விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெற்றனர். இந்த கோப்புகள் மீண்டும் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான கோப்புகளை மருத்துவமனையிலும் ஒப்படைத்தனர் அதிகாரிகள். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக விடுதலை செய்யப்பட்டார் சசிகலா. சசிகலா விடுதலை ஆவதை ஒட்டி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், அ.ம.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து பரபரப்பை ஏற்படுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டார்கள். வழிநெடுக சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு சிறப்பு உணவு, சிறப்பு, அறை கூடுதல் வசதி என அதிகாரிகள் லஞ்சம் பெற்று பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது என புகார் எழுந்தது.
இதனை விசாணைக்கு உட்படுத்த அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா,சசிகலா சிறப்பு சலுகைகளை பெறுவதற்காக டி.ஜி.பி சத்திய நாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, ‘சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என 245 பக்க அளவில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறையினர் சத்திய நாராயணராவ், கிருஷ்ணகுமார் மற்றும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கானது 2019-ம் ஆண்டு ஒன்றாம் கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும், கூடுதல் விசாரணை நடத்தப்படாமல் இருந்தது
.இந்நிலையில், கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்..,” சசிகலா தொடர்பான இவ்வழக்கை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். அதை ஏற்ற நீதிமன்றம், இறுதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் சதீஷ் சந்திர ஷர்மா, சச்சின் சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீதா தரப்பில், ‘சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கியதற்காக டி.ஜி.பி சத்திய நாராயணராவ், சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என வாதிடப்பட்டது.
அதற்கு ஊழல் தடுப்பு பிரிவில்..,’‘சத்திய நாராயண ராவ், கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை ரீதியான அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்' என கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இன்னும் (8.10.2021) தேதிக்குள் உரிய அனுமதி பெற்று குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான விசாரணை அறிக் கையை அன்றைய தினமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், உள்துறை முதன்மைச் செயலாளர் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராக நேரிடும்'' என உத்தரவிட்டனர். இதனால் சசிகலா தொடர்பான இந்த வழக்கு (8.10.2021) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!