இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என்றும், துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும் மயிலாடுதுறையில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியுள்ளார். மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் கோமல் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 




கூட்டத்தில் கட்சியினர் இடையே உரையாற்றிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது என்பதை எம்ஜிஆர் கட்சி சட்ட திட்டத்திலும், உயிலிலும் கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை  இன்று அனுபவிக்கிறார்கள். 


செல்லமாக என்னை தட்டினார் அவ்வளவு தான்"- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் மீதான புகாருக்கு பெண் பதில்



பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. பாவம் ஓபிஎஸ் இன்று அனுபவிக்கிறார். நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். இலங்கையில் இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் அதிக பொருட்செலவு செய்தால் அவரைகூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்குவார்கள். விரைவில் அதிமுகவை மீட்போம். தேர்தலின்போது வெளியிட்ட எந்த அறிவிப்புகளையும் நிறைவேற்றாத திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும். மீண்டும் தமிழகத்தில் நாம் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்றார்.




முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை வரவேற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அமுமுகவினர் திரண்டு இருந்தனர். கரகாட்டம் பட்டாசுகள் வெடித்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவரது வாகனத்திற்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் வாகனங்களில் படையெடுத்து வாகனத்தில் வெளியே தொங்கியவாறு,  கூச்சல் இட்டவாறு சென்றார். இதனால் கூட்டம் நடைபெற்ற தனியார் திருமண மண்டபம் அமைத்திருந்த மயிலாடுதுறை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் பலருக்கும் முகசுழிப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண