காஞ்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்

 

கொடநாடு  கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி வருகின்ற 18ந் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும், ஓ.பி.எஸ்யின் தீவிர ஆதரவாளருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 



காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும்,ஓ.பி.எஸ்யின் தீவிர ஆதரவாளருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் இன்றைய தினம் தனது  ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளத்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

 

”பேரறிஞர் அண்ணா பிறந்த மண்னான காஞ்சிபுரம் மண்ணின் மைந்தன்  அண்ணாவின்  திருவுருவப்படத்தை பொறித்து எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக கடந்த 50ஆண்டு காலம் வெற்றி நடைப்போட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமியும் இக்கட்சியை பிளவுபடுத்தி  தனது அதிகாரத்திற்கு கொண்டுசென்று பல தவறான திசைகளை கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

 



எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்ஸிற்கு கட்சியில் உரிய அங்கீகாரம் தற்போதுள்ள சூழ்நிலையில் இல்லை, இந்த கட்சினுடைய ஒருங்கிணைப்பாளர்,முதன்மை பொறுப்பிலுள்ள ஓ.பி.எஸ்யை  ஓர் சர்வாதிகாரமாக கூட்டம் சேர்ந்து எதிர்கிறார்கள்,இது இரக்கமற்ற செயல்பாடு,அதனை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கம் தான்  நிற்கின்றார்கள்,சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதனை போல் அவர் வெற்றி பெறுவார்,பண பலத்தால் ஜீன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி ஏமாற்றமடைந்தவர்கள்,இம்மாதம் 11ந் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பண பலத்தை காட்டுகின்றனர்.

 

ஒட்டு மொத்த பணத்தை வைத்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். எம்.ஜி.ஆர் சொன்னது போல் 80 சதவிகிதம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றார்களோ அவர்கள் தான் அதிமுக கட்சியை வழி நடத்த வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் இயற்றிய சட்டம் உள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து தொண்டர்களும் ஓ.பி.எஸ் பக்கம் தான் இருக்கின்றார்கள்.



கொடநாடு ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அதில்  சம்பந்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி வருகின்ற 18-ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

 

நள்ளிரவில் அந்தர் பல்டி 

 

இந்நிலையில், திடீரென நள்ளிரவில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஞ்சித் குமார்,  வருகின்ற 18/07/2022 அன்று இந்திய ஜனாதிபதி தேர்தல் உள்ளதால் நான் அறிவித்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான உண்ணாவிரதம் தள்ளிவைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.