நெருங்கும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 120 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்வை அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா.? அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என ரகசிய ஆய்வை நடத்தி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள எம்எல்ஏக்கள், தொகுதிகளில் மக்களுக்கான என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தியுள்ளனர் எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் முக்கிய தொகுதியாக இருப்பது ராயபுரம், 

Continues below advertisement

திமுக கோட்டையாக மாற்றிய ஐட்ரீம் மூர்த்தி

அதிமுகவின் கோட்டையாக பல ஆண்டுகளாக இருந்த இந்த தொகுதியை கடந்த 2021ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஜெயக்குமாரிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார் ஐட்ரீம் மூர்த்தி, அதனை தொடர்ந்து தக்கவைக்கும் வகையில் பல திட்டங்களை கடந்த 4 ஆண்டுகளில் ராயபுரத்தில் செயல்படுத்தி அசத்தியுள்ளார் ஐட்ரீம் மூர்த்தி. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பலரும் விரும்பி வரும் நிலையில், ஐட்ரீம் மூர்த்தியே மீண்டும் ராயபுரம் தொகுதி வேட்பாளர் தேர்வில் முதல் இடத்தில் உள்ளார். 

ராயபுரம் தொகுதியில் செய்த திட்டங்கள் என்ன.?

இந்த நிலையில் ராயபுரம் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஐட்ரீம் மூர்த்தி பட்டியலிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களை அறிவித்ததும் மட்டுமில்லாமல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக காலரை தூக்கிவிடுகிறார். 

Continues below advertisement

1. இராயபுரம் தங்கசாலை தொழில்நுட்ப பயிற்சி மையத்திற்கு 53வது வார்டில் ரூ.41.73 கோடி மதிப்பீட்டில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் மற்றும் உபகரணங்களும். மேலும் 3 கோடியே, 75 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் 100% நிறைவடைந்து. மாணவர்களுக்கு பயிற்சிநடைபெற்று வருகிறது. மாணவர்கள் சேர்க்கை வருடத்திற்கு 180 என்ற நிலையை மாற்றப்பட்டு  தற்போது 500 பேர் வருடத்திற்கு சேர்க்கை நடைபெறுகிறது.

2. ஆதிதிராவிட மாணவிகள் மற்றும் வேலை செய்யும் புதிய பெண்களுக்கு மகளிர் தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து முதல்வரின் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டு 480 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

3. சென்னை மாநகராட்சி பள்ளி 100% பணிகள் நிறைவடைந்து, தரம் உயர்த்தப்பட்ட புதிய நவீனப் பள்ளிக்கூடத்தில், LKG முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.

4.நான் முதல்வன் திட்டத்தின் கீழ ITIயில் IAS, IPS, Banking Exam, TNPSC, Group 1 to 4 தேர்வுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை 90 மாணவ மாணவியர்கள் தேர்வுச் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

5. ரூ.30 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட RSRM மருத்துவமனையில் புதிதாக 300 படுக்கைகள் வசதி கொண்ட நான்கு மாடி கட்டங்கள் (இரண்டு) கட்டும் பணிகள் 98% நிறைவடைந்து.

6. ரூ.5.கோடியே, 90 லட்சம் மதிப்பீட்டில் இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அப்பாசாமி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிகள் நிறைவடைந்து முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்டது. 

7. ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏழை எளியோருக்காக சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

8.ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு முதல்வர் அவர்களால் தங்க சாலையில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

9. இராயபுரம் தொகுதியில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் பொது மக்கள் முறையான பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாசியர் அவர்களிடம் இவர்களிடம் உள்ள முறையான சான்றிதழ்களை கொடுத்து 2500 முதல் 3000 பேருக்கு முறையான பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.10.ரூபாய்.24 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாண்டுகளில் பெருகி உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் இது போல ஏராளமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.