ஓபிஎஸ் - அரசியல் பயணம்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டு களப்பணியை தொடங்கியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மூத்த தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் அங்கிருந்து விலகி தனியாக செயல்பட்டு வருகிறார். 

Continues below advertisement

மத்திய அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்

இந்த நிலையில் பாஜகவின் உதவியோடு மீண்டும் அதிமுகவில் இணைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தற்போது பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக பாஜக அரசின் திட்டங்களை அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார். ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். தற்போது சாதாரண மக்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வாகன வரி உயர்வு, கங்கக் கட்டண உயர்வு பராமனிப்புச் செலவு ஆகியவற்றால் சாலைப் போக்குவரத்துக் சட்டணங்கள் கணிசமாக அவ்வப்போது உயர்ந்து வருகின்ற நிலையில், ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக இரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம்

இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்தது. இந்த நிலையில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் 215 கிலோ மீட்டர் மேல் சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட சாதாரண மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்தப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

ஏற்கெனவே சாதாரண வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அதிகரித்து வருவதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு மறைமுகமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆண்டிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கின்ற நிலையில், நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு வரை மூத்த குடிமக்களுக்கு அரிக்கப்பட்ட சலுகை பறிக்கப்பட்டதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கின்ற நிலையில், ஆண்டிற்கு இரண்டு முறை இதுபோன்ற கட்டண உயர்வு என்பது நியாயமற்ற செயல்

ரயில் கட்டண உயர்வை ரத்து செய்க

நாட்டில் தற்போது உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏழையெளிய மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய வெண்டுமென்று கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.