சேலம் மாநகர் சூரமங்கலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சென்னை, செங்கல்பட்டு உள்பட நான்கு மாவட்டங்கள் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். 6, 7 தேதிகளில் நடக்கும் நடக்க உளள தேர்வுகளை அரசு ஒத்திவைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து அவர் கூறும் போது, இன்னும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அந்த சூழ்நிலை இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஒரு நிலைப்பாடு உள்ளது. இந்தியா கூட்டணியில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறோம் என்று கூறினார்.
மண்பாண்ட தொழிலாளர்கள்:
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அது குறித்து அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் பானை சேர்க்கப்பட்டால் வரவேற்போம். முட்டை தர வேண்டும் என்று பலமுறை முயற்சி எடுத்தோம். பின்னர் சத்துணவில் முட்டை சேர்க்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
இதுபோல மண்பாண்ட தொழிலாளர்களும் பயனடையும் நிலை ஏற்படும். தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு இன்னமும் வழங்கப்படாதது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதி போதிய அளவு நிதி தர வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் நிதி தராமல் அரசியல் பேசுகிறார்கள். டெல்லியில் இருந்து வந்த குழுவினர் உண்மையை தெரிவித்த பின்பும், உண்மை நிலையை புரிந்து கொண்டும் அரசியல் பேசுகிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரித்த வகையில் பொய் வழக்கு என தெரியவந்துள்ளது. நீதிமன்ற மூலம் நிரூபிக்க வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு உண்மை தெரிய வரும். சிலர் கொடுத்த புகாரை வைத்து கொச்சைப் படுத்தி உள்ளனர். கொடுத்த புகாரில் உண்மை இல்லை என நிரூபிப்பார். நீதிபதிக்கு பொய் என்று தெரியும் அவசரப்பட்டு நடவடிக்கை உள்நோக்கத்துடன் செய்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு தான் உண்மை நிலையை தெரிவிக்கும். சேலம் மாவட்டம் பிரிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சேலம் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டம். கட்டாயம் மூன்று மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளோம் முதல்வரும் இது குறித்து பரிசுகளை செய்ய வேண்டும் என்றார். மேட்டூர் உபரி நீர் திட்டம் குறித்து கேட்டதற்கு, இந்த திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. பட்டா நிலத்தில் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறிய சிறிய சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படும். இந்தத் திட்டத்தை முடக்க முடியாது. வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். தாமதத்திற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. சேலத்திற்கு பாலம் என்ற கூறப்படும் அளவுக்கு பாலங்கள் உள்ளது ஆனால் சீலநாயக்கன்பட்டி கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சேலம் சீலநாயக்கன்பட்டி பாலத்தில் திட்டம் குறைபாடுடன் கட்டப்பட்டது இதனை சரி செய்ய வேண்டும். ஆளுநரை தமிழக முதல்வர் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து பேசி உள்ளார். நல்லது நடக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சித் திட்டங்கள் முடக்காத நிலை ஏற்பட வேண்டும்.