அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கையை இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுவர் விளம்பரத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என்று எண்ணி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், ஏற்கனவே வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை அ.தி.மு.க.வினர் அழித்தனர்.


விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட மாணவர் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயரை மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் தலைமையில் மாணவர் அணியினர் அழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது வேண்டும்... வேண்டும்... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத்தலைமை வேண்டும் என வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


இதேபோல் கட்சி அலுவலகம் அருகில் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் வெள்ளையடித்து அழிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், துணை செயலாளர் செந்தில், நகர அவைத்தலைவர் பால்ராஜ், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் ராஜ்குமார், நகர மாணவர் அணி நிர்வாகிகள் தீனா, குட்டி, குணா, ராஜா, தேவா ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும், அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களைத் தொடர்ந்து  ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்புமனுத்தாக்கலில் பங்கேற்க சென்றதாக விளக்கம் அளித்த ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜூலை 11-ந் தேதி மீண்டும் கூட உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். 


இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுவர் விளம்பரத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என்று எண்ணி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண