நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் களம் காண்கிறது. முழு மனதோடு, தன் இயக்கத் தோழர்களை வாழ்த்தி, வழியனுப்பி வைத்த விஜய், ‛இயக்க பெயரை பயன்படுத்திக்கோ... இயக்க கொடியை பயன்படுத்திக்கோ... இயக்க லோகோவை பயன்படுத்திக்கோ... என் போட்டோவையும் பயன்படுத்திக்கோ...’ என வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் போதிய ஆள் இல்லை என்றாலும், இருக்கும் இடங்களில் வேட்புமனுத்தாக்கலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள். இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள இயக்கத்தினரை வெற்றி பெற வைக்க ஏற்கனவே நியமிக்கப்பட்ட இயக்க நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் குவிந்துள்ளனர். 




நெல்லையில் குழுமி பணியாற்றி வரும் மதுரை மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள், சற்று முன் அங்கு அவசர தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் விஜய் மக்கள் இயக்கம் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ... அங்கெல்லாம் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. முதன்முறையாக விஜய் தங்களுக்கு பச்சைகொடி காட்டியிருப்பதால் அதற்கு ஏற்றவாறு, அவர் முடிவு சரி என்பதை நிரூபிக்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று ஆவேசமாக பேசினர். 




இந்த முறை பெறும் வெற்றியை தளபதி காலில் கொண்டு போய் கொட்ட வேண்டும் என்றும், அதை கண்டு அவர் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க வேண்டும் என்றும் இயக்கத்தினர் ஒருவருக்கொருவர் உற்சாகவும், உணர்ச்சிபூர்வமாக பேசிக்கொண்டனர். இந்த கூட்டத்தில் நெல்லை மட்டுமின்றி பிற மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள்பலரும் பங்கேற்றனர். இதோ போல உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் இறுதி பட்டியல் உறுதியானதும், அடுத்தகட்டமாக புயல் வேகத்தில் பணியாற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 


 


மேலும் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள...