விழுப்புரம்: தமிழகத்தில் அரசுக்கே தெரிந்து போலி மதுபானம் விற்பனை செய்யபடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இதனால் அரசுக்கு வரி ஏய்ப்பு ஏற்படுவதால் அரசு போலி மதுபானம் விற்பனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்த்துள்ளார்.


டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்பனை:


விழுப்புரத்திலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசுகையில், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் போலி மதுபானக் விற்பனை ஆறாக ஓடுவதாக குற்றஞ்சாட்டிய நிலையில் கள்ளச்சாராயத்தினால் எக்கியார்குப்பத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அரசால் நடத்தப்படுகிற டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது, போலி என்றால் சாராயத்தில் கலர் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தஞ்சாவூரில் இருவர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சைனைடு கலந்த மதுவினால் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை யார் சைனைடு கலந்து கொடுத்தது என்று கண்டுபிடிக்கவில்லை மதுரை கிடாரிபட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்த கோவில் பூசாரி அவரது நண்பர் மற்றும் 16 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சென்றபோது பூசாரி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் இதில் பெயிண்ட் கலந்து குடித்ததினால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். 


அரசே, காவல் துறையினரை செயல்படாமல் கட்டி போட்டு வைத்துள்ளார்களாக அல்லது காவல் துறையினர் மெத்தனத்தோடு செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்பினார். போலி மதுபானம் அரசுக்கு தெரிந்தே விற்பனை செய்யபடுகிறது. மது அருந்துவதினால் உயிரிழப்பு ஏற்படுகிறது வரி ஏய்ப்பு ஏற்படுகிறது. அரசு போலி மதுபானம் விற்பனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் பொன்முடி கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்தை திசை திருப்பவே மேல்பாதி கிராமத்தில் நடைபெற்று வரும் கோவில் பிரச்சனை கிளப்பி இருப்பதாக குற்றஞ்சாட்டினேன்.  கனியாமூர் வழக்கில் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சனையில் ஏற்பட்டது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது மேல்பாதி கிராமத்தில் நடைபெற்று வரும் பிரச்சனை குறித்தும் நான் பேசியது குறித்தும் சிந்தனை செல்வன்  தெரிந்து பேசவேண்டும் என்றும் கோவில் என்பது அனைவரும் பொதுவானது அதை எல்லோரும் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என கூறினார். ஜப்பான் சென்று வந்த முதல்வர் ஸ்டாலின் களைப்பு தீராதாதால் களைப்பு முடிந்து ஒடிசா செல்வார்” என எதிர்பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.