ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் வெல்லும் சனநாயகம் மாநாடு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீர்மானங்களை வாசித்த திருமாவளவன் பேசுகையில், “பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவு நல்க வேண்டும். பாஜகவின் வெறுப்பு அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம். மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 200 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டது.
ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கைவிட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை முற்றாக தகர்ந்துள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை வாக்கு இயந்திரங்கள் மூலம் நடத்தக்கூடாது. நூறு சதவீதம் வாக்கு இயந்திரங்கள் ஒப்புதல் வழங்கும் சீட்டுடன் இணைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாங்கள் அளிக்கும் வாக்குக்கு ஒப்புதல் சீட்டை பெற்று வேறொரு பெட்டியில் இட வேண்டும். தேர்தல் முடிவானது அந்த ஒப்புதல் சீட்டு முறைப்படியே அறிவிக்க வேண்டும்.
தட்டிக்கேட்க வேண்டும்:
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 575 நீதிபதிகளில் வெறும் 67 பேர் தான் ஓபிசியினர். ஓபிசி தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குவதிலேயே இருக்காமல் இந்த அநியாயத்தை தட்டிக் கேளுங்கள்" என்றார்.
வழக்கமாக விசிக கட்சியின் தேர்தல், பிரச்சாரம் மற்றும் மாநாட்டுப் பணிகளைக் கட்சியினர் மட்டுமே செய்து வந்த நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரத்யேகக் குழு பணியமர்த்தப்பட்டனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வெற்றிக்குப் பணியாற்றிய ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் ஊடகப் பிரிவை கவனித்து வந்த, தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைத்தவர்கள் விசிகவின் மறுசீரமைப்பு பணிகளைச் செய்து வந்தனர்.
இவர்களின் தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாக விசிகவின் கட்சி சீரமைப்பு, ஒருங்கிணைப்பு, புதிய நிர்வாகிகளை அடையாளம் காணுதல், கட்சி மறுகட்டமைப்பு, திருமாவளவன் பொன்விழா, வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த இந்த குழுவினர் தான் மாநாட்டின் முழுமையான வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.