அதிமுக மகளிரணி செயலாளராக கட்சி செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இலக்கிய அணிச் செயலாளராக முனைவர் வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த கட்சியின் செய்தி அறிக்கையில்,
’கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும்,
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும்
இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள்
கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக மகளிர் அணி நிர்வாகிகள்
செயலாளர் - திருமதி பா. வளர்மதி, (B.A.,) அவர்கள்
(கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்)
இணைச் செயலாளர்- திருமதி மரகதம் குமரவேல், B.A., M.LA., அவர்கள்
(செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கழக இலக்கிய அணி
செயலாளர் - முனைவர் வைகைச்செல்வள், M.A., B.L, D.Ed.,
D.Lit.,Ph.D., அவர்கள் (கழக செய்தித் தொடர்புச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர் )’
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.