காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சேர்ந்த சுந்தர் - முருகம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேஷ் (வயது 25) சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மீது ஆர்வம் கொண்டிருந்த கணேஷ் தனது நண்பர்கள் உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் ஓவியங்களை வரைந்து கொடுத்து வந்துள்ளார்.



இந்நிலையில்,  ஓவியத்தின் மீது உள்ள தனியாத தாகத்தால் தொழிற்சாலை பணியிலிருந்து வீடு திரும்பி ஓய்வு நேரங்களில் தொடர்ந்து சார்கோல் ஆர்டிஸ்ட் எனும் பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார்.



இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோதிடங்களையும், ஆருடங்களையும் பொய்யாக்கி தனது முயற்சியினால் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதை  நினைவு கூறும் வகையில் இளைஞர் கணேஷ், முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தும், தமிழ் எழுத்துக்கள் 247, மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள், உள்ளிட்ட 741 எழுத்துக்களால் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவத்தை தத்ருபமாக ஓவியமாக வரைந்து உள்ளார்.



இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்த நிலையில், இதனை ட்விட்டர் பக்கத்தில் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பின் வழியது உயர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துக்களால் ஓவியக்கலை மாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வள்ளுவம் போல் இந்த ஓவியம் வாழும் என இளைஞர் கணேஷ் வாழ்த்தியுள்ளார்.



தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டியதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் அறிஞர்களும், கணேஷ் பாராட்டி வருகின்றனர். மேலும்  முதலமைச்சரின் முயற்சியினை பெரிதும் பாராட்டி நினைவு கூறும் வகையில் வரையப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தை முதலமைச்சர் அனுமதி அளித்தால் அவருக்கு பரிசளிக்க உள்ளதாகவும், தற்பொழுது வாழ்வாதாரத்திற்காக தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாலும், தனது ஓவிய திறமைக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அதன் தொடர்புடைய பணியினை தமிழக அரசு வழங்கி உதவிட வேண்டுமென காஞ்சிபுரம் இளைஞர் கணேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கணேஷ் கூறுகையில், முழுவதுமாக தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து உள்ளேன் . இதுகுறித்து நான் ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தேன் இது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு சென்ற அவர் என்னை பாராட்டியது மிகவும் பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

 



முதல்-அமைச்சர் பாராட்டிய திருவள்ளுவர் ஓவியம் தற்போது சமூக வலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

 

 

[tw]


[/tw]