சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி நியமனம் செய்யப்பட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜவகர் சர்க்கார் விமர்சனம் செய்துள்ளார்.


அமைச்சர்கள் ராஜினாமா:


பிரதமர் மோடியின் இரண்டாவது முறை ஆட்சியின் போது முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவை எம்பியான அவர். அவரது பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தார். அவருடன் மத்திய இரும்புத்துறை அமைச்சராக இருந்த ஆர்சிபி சிங்கும் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருவரது ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டார். முக்தர் அப்பாஸ் நக்வி வசித்து வந்த சிறுபான்மையினர் நலத்துறை பதவி ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி ராணிக்கு வழங்கப்பட்டது. ஆர்சிபி சிங்கின் அமைச்சர் பதவி ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு வழங்கப்பட்டது.




ஸ்மிருதி இராணிக்குக் கூடுதல் பொறுப்பு:


இதனையடுத்து, கடந்த ஜூலை 7ம் தேதி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி பொறுப்பேற்றுக்கொண்டார்.


ஜவகர் சர்க்கார் விமர்சனம்:


இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவகர் சர்க்கார், “நக்வி தன் பதவியை ராஜினாமா செய்த பின்பு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி நியமிக்கப்பட்டிருக்கிறார். மிகத்தீவிரமான இந்து, பார்சி இனத்தவரை திருமணம் செய்துகொண்டவர் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பொறுப்பா?. இது தான் பாஜக பிராண்ட் மதச்சார்பின்மையா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.






கிரண் ரிஜுஜு பதிலடி:


இதற்கு பதிலடி கொடுத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்? போலி மதச்சார்பின்மை மற்றும் சமாதான அரசியலின் போன்றவைகளில் இருந்து ஒருவர் மனதை விடுவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தவர்கள், ஜெயின் சமூகத்தினர் மற்றும் பார்சி இனத்தவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் என்று தேசிய ஆணையம் 2(சி)ன் படி சிறுபான்மையினர் சட்டம் 1992ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.”. காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் போலி மதச்சார்பின்மை கட்சிகளுக்கு சிறுபான்மையினர் என்றால் அது இஸ்லாமியர்கள் மட்டும் தான். ஏனென்றால், புத்தமதத்தவர்கள், ஜெயின் சமூகத்தினர், பார்சிக்கள், சீக்கியர்களுக்கு எல்லாம் பெரிய ஓட்டு வங்கி இல்லை. இவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தேர்தல் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.






ஸ்மிருதி இராணி பதிலடி:


ஜவகர் சர்க்காருக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. “நாங்கள் எல்லாருக்கும் தான் சேவை செய்கிறோம். யாரையும் சமாதானப்படுத்துவதில்லை. எப்போது நான் அமைச்சராக அமர்கிறேனோ, நான் இந்தியாவிற்கு சேவை செய்கிறேன். சமூகங்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.