காஞ்சிபுரம் அருகே நல்லூர் பகுதியில் ஸ்ரீ சங்கர கல்வி மற்றும் மருத்துவ டிரஸ்ட் மூலம் சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.


கட்டிடத்தை திறந்து வைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், காஞ்சிபுரம் வந்தாலே பேச்சு வர மாட்டேங்கிறது அப்படிப்பட்ட ஒரு புண்ணிய சேத்திரம் இது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரேன் வழியில் பல வரலாறு நூல்களை காஞ்சிபுரத்தை பற்றி இடம் பெற்று இருக்கிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சிவகாமி சபதம் எல்லாவற்றிலும், காஞ்சிபுரம் சென்னை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளது. 


செவிலியர் கல்லூரி மகிழ்ச்சி அளிக்கிறது


பாரத நாட்டில் தென்னாட்டில், நம்முடைய பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் உதாரணத்திற்கு திகழும் அளவு இங்கே கலாச்சாரம் பரவி இருந்து, அரசர்கள் பரந்த மனதுடன் மக்களை காப்பாற்றினார். சிற்பக்கலை பரவியிருந்த்து. வங்கக்கடல் என்று சொல்லும் பொழுது எனக்கு புல்லரிக்கும் அது மகா புராதானமான ஒரு கடல், நம் தமிழ்நாட்டில் இப்பேற்பட்ட பிராந்தியத்தில் பிறந்த மக்கள் சேவை செய்வதில் நாம் முன்னோடியாக இருந்திருக்கிறோம். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் காமாட்சி அருள் பெற்ற காஞ்சி மடம் உள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவமனை, செவிலியர்கள் கல்லூரி கொண்டு வந்தது மகிழ்ச்சி. 


மருத்துவத்திற்கு முக்கியத்துவம்


180 மாணவிகள் 66% பேர் கிராமப்புறத்து மாணவர்களாக இருந்து வந்தாலும் 60 தில் 48 பேர் பட்டியலின் மாணவர்கள். 100ல் 28 பேர் மிகவும் பின் தங்கியவர்கள். 22 பின்தங்கிய பெண்கள் இங்கு பயின்றுள்ளார்கள் என்பது மிகப்பெரிய காரியம் அவரது குடும்பத்தை உயர்த்தி உள்ளீர்கள். 70 வயது மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டுக்கான காப்பீட்டு மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அயுஷ் மான் பாரத் திட்டம், அவர்கள் ஏழையா பணக்காரனா என்றெல்லாம் பார்க்காமல் அவர்களுக்கு இந்த திட்டம் பிரதமர் அறிவித்தார். 


மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நம் நாட்டில் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல செவிலியர்களுக்கான படிப்பிற்காக நிறைய உதவி செய்ய வேண்டும் நிறைய பாடப்பிரிவுகள் கொண்டு வர வேண்டும். அதில் இளைஞர்களை பயிற்றுவிக்க வேண்டும். 800 பெண்கள் சிங்கப்பூருக்கு செவிலியர்கள் தமிழகம் அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்றுள்ளார்கள். அதே போல, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதனால் அவர்களுக்கு செவிலியர்களும் பிசியோதெரபி கொடுக்கும் நிபுணர்களும் அதிகமாக தேவை. 


தாய்மொழியை மறக்க வேண்டாம்


ஒரு வேளை வட இந்தியாவுக்கு வேலை சொல்ல வேண்டும் என்றால் ஹிந்தியோ - பஞ்சாபியோ கற்றுக்கொள்ள வேண்டும், கிழக்கு இந்தியாவுக்கு சென்றால் வங்க மொழியோ கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. நீங்கள் தாய்மொழியை மறக்க வேண்டாம். ஆனால் தாய்மொழியை விட்டால் இதர பாரதிய மொழியை கற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல வேண்டாம்,  முடிந்தால் பிரெஞ்சோ, ஸ்பானிஷோ கற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால், வேலைக்கு செல்லும் பொழுது அந்த நாட்டின் பாஷைகளை கற்றுக் கொள்வது நல்லது. அந்த மாதிரி பயிற்சியும் கொடுக்க இன்று நிறைய பேர் உள்ளனர். மூன்று ஆண்டு செவிலியர் படத்தில் மூன்றாவது ஆண்டு இறுதியில் சாயந்திர வேளையில் டிஜிட்டல் முறையில், அதற்கான முயற்சியை நிறைய இருக்கிறது. செவிலியர்களுக்கான டிமாண்ட் வளர்த்துக் கொண்டே போகிறது, வெளிநாட்டிலும் அதற்கான வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போகிறது. வேலைவாய்ப்பு என்பது நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இருக்கிறது.


செவிலியர்களாக பணியாற்ற இருக்கும் மாணவிகள் உங்களது ஆரோக்கியம் உங்களது போஷாக்கு மிகவும் முக்கியம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், யோகா போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வீட்டில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுங்கள். அதிலிருந்து தான் ஆரோக்கியம் நம்முக்கு வரும். ஒரு நல்ல செவிலியராக இருக்கும் என்றும் என்றால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.