கரூர் மாவட்ட திமுக செயலாளராக போட்டியின்றி தேர்வான அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணா சிலை, பெரியார் மற்றும் கருணாநிதி திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை. ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், கரூர் மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், பெரியார் மற்றும் கருணாநிதி உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். கரூர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கரூர் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக டிரம் செட் முழங்க, பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் கட்சி மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ சிவகாம சுந்தரி கரூர் மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநில சட்டப்பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் மணிராஜ் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் பரணி மணி மாநகராட்சி செயலாளர் எஸ் பி கனகராஜ் மண்டல தலைவர்கள் அன்பரசன் ஆர் எஸ் ராஜா, வெங்கமேடு சக்திவேல், நகராட்சி பகுதி செயலாளர்கள், கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சாலை சுப்ரமணி, ஆண்டாள் பாலகுரு, மாநகராட்சி துணை செயலாளர் எம்.பாண்டியன் அரவின்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் அங்கு பசுபதி, இந்தியன் குமார், நகராட்சி தலைவர்கள் குணசேகரன், குளித்தலை பல்லவி ராஜா, இளைஞர் அணி அமரஜோதி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் எம்.ரகுநாதன், ஆர்.கந்தசாமி, கே.கருணாநிதி, வளர்மதி சிதம்பரம், கோயம்பள்ளி பாஸ்கர், நெடுங்கூர் காந்தி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குடியரசு பொதுக்குழு உறுப்பினர்கள் வி.கே.டி.ராஜக்கண்ணு,
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தம்பி சுதாகர், இன்ஜினியர் அருள்முருகன், கரூர் பல்லவன் பிளாஸ்டிக் உரிமையாளர் நசீர் முகமது, மாமன்ற உறுப்பினர்கள் வசுமதி பிரபு, சாலை ரமேஷ், பசுவை சக்திவேல், பரமத்தி மேற்கு ஒன்றிய அவை தலைவர் துரைசாமி, துணைச் செயலாளர்கள் நல்ல சிவம், பரமேஸ்வரி செல்வராஜ், பொருளாளர் ரகுநாதன், பிரதிநிதிகள் மோகன், கார்த்திகேயன், கதிர்வேல், தொழிற்சங்க செயலாளர் அண்ணா வேலு, துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, பூவே ரமேஷ்பாபு, இரும்பு கடை மோகனசுந்தரம், கரூர் மத்திய நகரப் பகுதி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் பி.குமார், மோகன் குமார், புவனேஸ்வரி, பொருளாளர் ராஜலிங்கம், பிரதிநிதிகள் காமராஜ், கந்தசாமி, மதி, அருள்குமார், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜியை வரவேற்பதற்கு கரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது . கரூரில் முக்கிய பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.