தமிழ்நாட்டில் கடந்த சட்டபை தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றார். முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினும் திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு தேர்வானார்.


அமைச்சரவை பட்டியல் வெளியானபோதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சமீபகாலமாக அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.




இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் காளப்பட்டியில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இந்த முகாமை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பேசியுள்ளனர். ஆனால், எனக்கு அந்த பொறுப்புகளின் மீது எந்த வித ஆசையும் இல்லை. அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் நான் என்று பேசினார்.


தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள், இளம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க.வின் அனைத்து போஸ்டர்கள், பேனர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் படம் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. உதயநிதி விரைவில் அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் தனக்கு அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவிகளின் மீது ஆசை இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 




எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வரும் அதே வேளையில் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கனா படத்தை இயக்கிய அருண் காமராஜா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : திமுகவை நடமாடவிடமாட்டோம் என்ற ராஜேந்திரபாலாஜி தற்போது ஒளிந்து கொண்டு இருக்கிறார்- அமைச்சர் நாசர்


மேலும் படிக்க : Rahul Dravid: கேப்டன்சியில் இருந்த நீக்கப்பட்ட விராட் கோலி.. அதிரடியாக பேசிய டிராவிட்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண