கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாதாரம் வன்மையாக கண்டிக்க கூடிய சம்பவம். கோவையிலும் நேற்று இது போன்று நடந்துள்ளது. இதையெல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு பிஜேபி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பிரதமர் மோடி வரலாற்று மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று சிறப்புமிக்க ஆட்சி அமைத்துள்ளார். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த உடன் ஏழை மக்களின் நலனுக்காக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்று கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இரண்டாவது கையெழுத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிதியை வழங்கியுள்ளார். இந்த நாட்டை பிரதமர் மோடி வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்திற்கு குலசேகரப்பட்டணம்ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என இந்த அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றாததை மிகப்பெரிய செயலாக நான் பார்க்கிறேன். இதை பாஜக வன்மையாக கண்டித்து உள்ளது. பிரதமர் தூத்துக்குடிகக்கு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி - மதுரை இரட்டை ரயில் பாதை திட்டம் மோடி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது ஓடுதளம் மட்டும் மூன்று கிலோ மீட்டர் தூரம். அதாவது சென்னையை விட மிகப்பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக மிகப்பெரிய ஏர்பஸ் வசதி கொண்ட விமான நிலையமாக அமைந்து வருகிறது.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாதாரம் வன்மையாக கண்டிக்க கூடிய சம்பவம். கோவையிலும் நேற்று இது போன்று நடந்துள்ளது. இதையெல்லாம் தமிழ்நாடு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பற்றி தர வேண்டும். கொல்கத்தாவில் இதுபோன்று மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அங்கு அரசு சரியான நடவடிக்கையாக எடுக்காததால் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளது.
மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.மத்திய அரசு, மாநில அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
திமுகவின் நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடியின் குற்றச்சாட்டிற்க்கு, நாணய வெளியீட்டு விழா ஒரு அரசின் விழா. இது எந்தவித அரசியலுக்கு அப்பாற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வருவதால் தமிழ்நாட்டில் திமுக ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது.தமிழ்நாட்டின் அமைச்சர்கள், திமுக என்னென்ன செய்து வருகிறதோ அதை அவர்கள் இன்னும் அதிகமாக செய்வார்கள். அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும் என்றார்.