தன்னை 3 ஆம் கலைஞர் என யாரும் அழைக்க வேண்டாம்  என திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா  இன்று உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியும்,நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது.





 

பின்னர் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3வது பெரிய இயக்கமாக திமுக உள்ளதாகவும், கடந்த 3 தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததாகவும் கூறினார். நான் தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்துள்ளேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களை பெரியார், அண்ணாவின் மறு உருவமாக பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 






என் மீது பாசம், அன்பு இருப்பதால் என்னை 3 ஆம் கலைஞர் என்றோ, இளம் தலைவர் என்றோ அழைக்கிறீர்கள். இதில் துளியும் விருப்பமில்லை. என்னை சின்னவர் என்று சிலர் அழைக்கிறார்கள். அது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக திமுக இளைஞரணிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண