சசிகலா சுற்றுப்பயணம்:


கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதையடுத்து அதிமுக கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்னை பொதுவெளியில் அனைவருக்கும் தெரிய வந்தது. இந்நிலையில் அதிமுக-வில் ஒற்றை தலைமை விவகாரத்தை ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமையை எதிர்த்து வருகின்றனர்.


இந்நிலையில், சசிகலா தொண்டர்களை பார்ப்பதற்காக சென்னையிலுள்ள வீட்டிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரட்டை இலை பொறுத்தப்பட்ட வாகனத்தை திருத்தணி சென்ற அவர், அங்குள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். அதிமுக-வை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது என வி.கே.சசிகலா தெரிவித்தார். 




சிறு வயதிலே பார்த்துள்ளேன்:


எம்.ஜி.ஆர் மறைவின் போது, இதே போன்ற சூழல் ஏற்பட்டதை, என் சிறுவயதிலே பார்த்துள்ளேன், அதே போன்ற சூழல்தான் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுக கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எங்கள் பிரச்னையை நாங்கள சரி செய்து கொள்வோம் என சசிகலா தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண