நாளை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சென்னை ராயபேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஈபிஎஸ் பெயர்கள் இல்லாமல் தலைமைக்கழகம் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திங்கள் கிழமை தலைமைக்கழகம் எம்.ஜி.ஆர் மாளிகை அரங்கில் கூட்டம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பொதுக்குழு நடத்த தடையில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.  


இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸை ஈபிஎஸ் யின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.


 




இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறுமென அறிவிக்கப்பட்டநிலையில், வைத்திய லிங்கம் பொதுக்குழு நடக்காது என பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகிவிட்டது என பேட்டியளிக்க, ஓபிஎஸ் தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.