தன்னை சின்னவர் என்று அழைத்தால் பலருக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும் , சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி , 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையில் இயந்திரமும் வழங்கினார்.
விழாவில் பேசிய உதயநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு தடுப்பூசி போட்டுகொண்டும் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் சென்றதால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார். நலமாக இருக்கிறார். இனி அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்குள் திட்டிக் கொண்டு கல் எரிந்து கொள்கிறார்கள். என்னை 'சின்னவன்’ என்றே கூறுங்கள்,என்னை 'சின்னவரே' என்று கூறினால் பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்,ஆகையால் என்னை நீங்கள் 'சின்னவன்' என்றே கூப்பிடலாம் என்றார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா ஜூன் மாதம் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியும்,நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3வது பெரிய இயக்கமாக திமுக உள்ளதாகவும், கடந்த 3 தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததாகவும் கூறினார்.
நான் தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்துள்ளேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களை பெரியார், அண்ணாவின் மறு உருவமாக பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.என் மீது பாசம், அன்பு இருப்பதால் என்னை 3 ஆம் கலைஞர் என்றோ, இளம் தலைவர் என்றோ அழைக்கிறீர்கள். இதில் துளியும் விருப்பமில்லை. என்னை சின்னவர் என்று சிலர் அழைக்கிறார்கள். அது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான் என்றார்