தேர்தலுக்கு தயாராகும் தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, இரண்டு மாநில மாநாட்டை நடத்தி கலக்கியிருந்தார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டவர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர். நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

Continues below advertisement

இதன் காரணமாக சுமார் 2 மாதங்கள் தவெகவின் அரசியல் பணிகள் முடங்கி கிடந்த நிலையில், 72 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த வாரம் விஜய் நடத்தினார். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து 43 நிபந்தனைகளோடு ஈரோட்டில் இன்று பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவினல் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், 

ஈரோட்டில் விஜய் பேச்சு

மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு, இந்த மண் விவசாயத்திற்கு பெயர் போன மண், இந்த மண்ணில் காலிங்கராயன், அணை கட்டியதிலும் உணர்வு பூர்வமான விஷயம் உள்ளது. அணை கட்டும் போது ரொம்ப சோர்வடைந்துவிட்டார். அவரது அம்மா தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அணை கட்ட அனுப்பினார்கள். பெற்ற தாய் கொடுத்த தைரியம்,  எதையும் சாதிக்க முடியும். அப்படி பெற்ற தாய் போல் தான் நீங்கள், தங்கை, தம்பி, அண்ணன் எல்லாம் நீங்கள் தான்,

Continues below advertisement

எப்படி விஜய் பெயரை கெடுக்காலம் என சூழ்ச்சி செய்யும் கூட்டம் உள்ளது. இந்த உறவு  இன்று நேற்று வந்த உறவு இல்லை, 32 ஆண்டுகளாக உறவாக உள்ள உறவு,10 வயதில் திரைத்துறையில் எனது பயணம் தொடங்கியபோது உருவான உறவு, நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த விஜய்யை மக்கள் ஒரு நாளும் கை விட மாட்டார்கள். மக்கள் கூடவே நிற்பார்கள் என அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

காலிங்கராயர் அணை - விஜய் சொன்ன குட்டி கதை

இந்த பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்துனா மக்களுக்கு எவ்வளவு பயன் கிடைக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டில் மக்களை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் அப்போவே மக்களுக்காக யோசித்து தான் காலிங்கராயர் அணையை கட்டினார். ஈரோட்டில் மற்றொருவரும் இருந்தார்.  ஈரோடு கடப்பாறை தான் பெரியார்,  ஈரோடு மாவட்ட பிறந்தவர், இட ஒதுக்கீடு சடத்திற்காக போராட்டம் நடத்தியவர் நம்ம பெரியார். எப்போதும் ஆச்சரியமாக பார்க்க கூடிய தலைவர், நமது கொள்கை தலைவர் தான் தந்தை பெரியார். 

உங்களுக்குத்தான் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லை அல்லவா, பிறகு ஏன் கதறுகிறீர்கள்? எங்கு சென்றாலும் ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்குப் பயம் இல்லை என சத்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு, நடுங்கிக்கொண்டே செல்லும் சிறு பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள். முதலில் தலையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள். ஊடக ஆட்கள், வானொலி ஆட்கள் என்று இவர்களுடைய ஆட்களையே மாற்றி மாற்றி அனுப்பி வைத்துக்கொண்டு, இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

திமுகவை விளாசிய விஜய்

தொடர்ந்து பேசிய அவர்,

பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதனால் தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. 

 

 

தரக்குறைவாக பேசுவது தான் அரசியலா.!!

பெருமையாக 'மாடல் அரசு' என்கிறார்கள். இவற்றை கேட்டால் விஜய் அரசியலே பேச மறுக்கிறார், விஜய் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், விஜய் பஞ்ச் வசனம் பேசுகிறார், விஜய் பத்து நிமிடம் தான் பேசுகிறார், ஒன்பது நிமிடம் தான் பேசுகிறார் என நம்மிடமே திரும்பி வருகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? நான் எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? பேசுவதில் இருக்கும் விஷயம் என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அது அரசியல் இல்லாமல் வேறு எதுதான் அரசியல்? உங்களைப் போலத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, இழிவாகப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும். வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் நம்முடன் இணைந்தது நமக்கு ஒரு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் அண்ணன் அவர்கள் மாதிரி இன்னும் நிறைய பேர் நம்முடன் இணைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே உரிய அங்கீகாரத்தைக் கொடுப்போம். இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், 'என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்குறேன்' என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டடது . உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என விஜய் அவேசமாக பேசினார்.