நான் பிரதமர் மோடிக்கு மிகவும் விசுவாசமானவன், யாருக்கும் வளைந்து கொடுத்து செல்ல மாட்டேன் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அண்ணாமலை விஜய்க்கு அட்வைஸ்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த 10 நாட்களாக திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்படியான நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 16ம் தேதி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, விஜய் பேசிய வசனமான, ‘கம்முன்னு இருக்க வேண்டிய கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு ஒருக்கணும்’ என்பதை சுட்டிக்காட்டி அரசியலில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். 

Continues below advertisement

நாட்டில் இவ்வளவு பிரச்னை நடக்கும்போது நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தை வழங்குவார்கள். சரி இல்லை தவறு என்பதை விஜய் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதை செய்தாலே அவர் நல்ல அரசியல்வாதியாக வருவார். புதுச்சேரி மக்களுக்காக பேசிய விஜய், ஏன் திருப்பரங்குன்றம் மக்களுக்காக பேசவில்லை?. நியாயமான விஷயங்களுக்கு ஒன்றாக இருப்போம்” என தெரிவித்தார். 

தவெக தரப்பில் இருந்து வந்த பதில்

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் டிசம்பர் 17ம் தேதியான நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அண்ணாமலை பேசியதை குறிப்பிட்டு, “அவர் கம்முன்னு இருந்திருந்தால் கட்சியில் எங்கே இருக்கணுமோ அங்கு இருந்திருப்பார்” என கூறியிருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது. நான் உண்மையை பேசுபவன். யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன். ஒரு கட்சியில் சேர்ந்ததற்காக சினிமா நடிகருக்காக ஜால்ரா அடிக்க மாட்டேன். இந்த நாயின் வால் கொஞ்சம் வளைந்து தான் இருக்கும். நான் அப்படித்தான் பேசுவேன். பெருமையாக பேசுவேன். அதற்காக என்னை எதிர்வினை வந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன்.

இது பிரதமர் மோடிக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றியுள்ள விசுவாசமான நாய். சினிமா நடிகர்களுக்காக ஆதரவு தெரிவிக்க அரசு பதவியை துறந்து விட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. உன்னதமான கோட்பாட்டுக்கு வந்திருக்கிறேன். வருகின்ற காலத்திலும் பல பிரச்னைகளை சந்திக்கப் போகிறேன். ஆனால் மக்களுக்காக சந்திக்கும் அதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட பதவியே எனக்கு தேவையில்லை” என அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.