பாஜக நமக்கு துரோகம் செய்கிறது, திமுக நம்ப வைத்து ஏமாற்றுகிறது. பாசமா கூப்பிட்டா முதலமைச்சருக்கு பிடிக்க மாட்டேங்குது என்று அரியலூர் மக்கள் சந்திப்பில் விஜய் கடுமையாக சாடி பேசியிருந்தார்.

Continues below advertisement

விஜய் பிரச்சார பயணம்: 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மாநிலம் தழுவிய மாவட்ட வாரியான மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். திருச்சியில் இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணமானது, ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டமிடப்பட்டு டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட லோகோவில், ”உங்க விஜய் நான் வரேன், வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி இன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் விஜய் மக்களை சந்தித்து தனது பரப்புரையை தொடங்கினர்.

Continues below advertisement

திருச்சியில் சொதப்பிய மைக்:

இன்று திருச்சியில் தனது பயணத்தை தொடங்கிய விஜய்க்கு அங்கு பேச தொடங்கியவுடன் மைக் சரியாக வேலை செய்யாததால் பேச்சை பாதியிலேயே முடித்துகொண்டார்.

Sorry-உடன் பேச்சை தொடங்கிய விஜய்:

இந்த நிலையில் அரியலூரில் பேச்சை தொடங்கிய விஜய் “திருச்சியில் மைக் பிரச்னை இருந்ததால் அங்கு பேசிய ஒரு விஷயத்தை மீண்டும் சொல்ல நினைக்கிறேன் அந்த காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோயிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அடுத்த வருடம் நடக்க உள்ள 'ஜனநாயக' போருக்கு முன், மக்களாகிய உங்களை பார்த்து செல்ல வந்திருக்கிறேன்”

அரியலூரில் விஜய் பேச்சு:

தொடர்ந்து பேசிய விஜய் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும்,  டீசல் விலை குறைச்சீங்களா, நீட் தேர்வு ரத்து செய்தீர்களா கல்வி கடன் ரத்து 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது,  மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் , மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு போன்றவற்றை செய்தீர்களா என அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அடுக்கடுக்கான கேள்விகள்

ரேஷன் கடையில் உளுந்து, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத முன்னுரிமை என எதையுமே செய்யவில்லை.வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர்..சிமெண்ட் உற்பத்தி முந்திரி தொழில் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது…சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது

யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும்.ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை.மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும்  என்ற கோரிக்கை என்னவானதுஇந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன் என விஜய் கேள்வி எழுப்பினார்.

ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு

"505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், 'எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்' என கதை விடுகிறீர்களே My Dear CM Sir,  ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது” என விஜய் விமர்சித்து இருந்தார்