சிஎம் சார் பழி வாங்கணும் என்றால் என்னை பழி வாங்குங்க, என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் பரபரப்பு ஒன்றை வீடியோ வெளியிட்டுள்ளார்.
கரூர் சம்பவம், தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் என் வாழ்க்கைல இது மாதிரியான சூழ்நிலைல இருந்தது இல்ல, இப்படி ஒரு வலியை நான் அனுபவச்சிது இல்ல.
இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை சந்திக்க வந்ததுக்கு ஒரே காரணம் அவங்க என் மீது வைத்த அன்பும் பாசமும் தான்.
இந்த சுற்றுப்பயணத்துல மற்ற எல்லா அரசியல் விஷயத்தையும் தாண்டி மக்களின் பாதுக்காப்பு தான் முக்கியம் என்று யோசித்தே பிரச்சாரத்திற்கான இடங்களை தேர்ந்தெடுத்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் நடக்க கூடாதது நடந்துவிட்டது.
நானும் மனுஷன் தானே, அந்த ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடந்துட்டு இருக்கும் போது எப்படி என்னால் அங்கு இருந்து கிளம்ப முடியும், நான் அங்க திரும்பவும் வந்து இருந்தால் வேறு பதற்றமான சூழ்நிலையோ,வேறு எதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என்பதற்காகத்தான் நான் அங்கு வரவில்லை.
இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளையும், நிலைமையையும் புரிந்துக்கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் சொந்தகளை இழந்து தவிக்கிற அனைத்து குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன், மருவத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிற அனைவரும் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேம். எனக்கு தெரியும் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் இதற்கு ஈடாகாது. கூடிய சீக்கிரம் உங்கள் அனைவரையும், நேரில் வந்து சந்திக்கிறேன்.
கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டோம் , இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை, ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? ஆனால் மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், மக்கள் எல்லாவற்றை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கரூர் மக்கள் நடந்த உண்மையை சொன்ன போது அந்த கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பேசியதை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு மற்றும் எஃப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள்.
சிஎம் சார், உங்களுக்கு எதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்ன என்னவேணும்னாலும் பண்ணுங்க,அவங்க மேல கை வைக்காதீங்க நான் என் வீட்டில் அல்லது ஆஃபிசில் தான் இருப்பேன். நண்பர்களே தோழர்களே நம்மளுடைய அரசியல் பயணம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று விஜய் அந்த வீடியோவில் தெரிவித்தார்