திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். 


இது குறித்து  டிடிவி தினகரன் பேசும் போது, “ அதிமுகவை மீட்டெடுக்கப்போவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். பணம் கொடுத்து பதவிக்கு வர அசுரன் போல ஒருவர் செயல்படுகிறார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு அன்று நல்ல நேரமாக இருந்தது. அதனால் வாட்டர் பாட்டிலால் அடித்தனர். இல்லையென்றால் வேறு எதனாலெல்லாம் அடித்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த அயோக்கியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதே பெரிய விஷயம் தான்.


அதிமுக பொதுக்குழுவின் நிகழ்வுகள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தன. அதிமுக தவறான நபர்களின் கையில் சிக்கியுள்ளது. ஆளுக்கு 25 முதல் 5 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த இரட்டைத்தலைமை பிரச்னை திமுக விற்கு இலாபமாக அமைந்து விட்டது. ஓபிஎஸ் ஒரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவரை எங்கள் கட்சிக்கு வருவார் என்று கேட்பது சரியல்ல.” என்று பேசினார். முன்னதாக பொதுக்குழுவில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 






இதனையடுத்து அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக மாற்றப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர்  சிவி சண்முகம் ஒருங்கிணைப்பாளர் பணிகள் காலாவதியாகிவிட்டதாக கூறினார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்  தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண