எடப்பாடிதான் எங்களின் ஒரே எதிரி. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர்.

Continues below advertisement

முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 63ஆம் குருபூஜை இன்று (அக்.30) அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து, தேவர் ஜெயந்தி பிறந்தநாள், குருபூஜை விழாவில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக வந்தனர். அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டாய்ச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

’’அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டு வந்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். ஜெயலலிதாவின் பாதுகாப்பு அரண்களாக ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனும் திகழ்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் இதுபோன்ற சந்திப்புகள் மீண்டும் நடைபெறும். கொங்கு நாட்டுத் தங்கம் செங்கோட்டையன் தேவர் ஜெயந்திக்கு விருந்தினராக வந்துள்ளார்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமிதான் எங்களின் ஒரே எதிரி

எடப்பாடி பழனிசாமிதான் எங்களின் ஒரே எதிரி. சசிகலாவும் எங்களுடன் வருவதாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் இப்போது உடனில்லை. ஆனாலும் மனதால் எங்களுடன் இணைந்துள்ளார். திமுகவை வரும் காலத்தில் வீட்டுக்கு அனுப்புவோம்’’.  

இவ்வாறு டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

இதற்கிடையே, செங்கோட்டையன் கட்சி விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டால் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.