4 ஆண்டுகளில் ரூ.11.31 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற்று 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னையில் இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ ஏறத்தால 11 லட்சத்து 31 ஆயிரத்து 571.15 கோடிக்கான முதலீடு இது. மொத்தமாக 34 லட்சத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.”என்று கூறினார்.
TRB ராஜா THUG LIFE:
அப்போது அவரிடம் செய்தியாளர்கள்,”அப்போ இதையே வெள்ளை அறிக்கையாக எடுத்துக்கொள்ளலாமா?”என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா உடனே அருகில் இருந்த ஒரு வெள்ளை நோட்டை எடுத்து காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “ நான் ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறேன் தொழில்துறை லட்சக்கணக்கன இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கக்கூடிய ஒரு துறை.
லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒளியேற்றக்கூடிய ஒரு துறையாகவும் தொழில்துறை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக இருந்தால் நாங்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களின் பாலிசிகள் சரியாக இருக்கும் என்பதை உறுதிபடுத்துகிறோம். கடந்த ஆட்சியில் வந்த முதலீடுகளை நாங்கள் ஊக்குவிக்காமல் இல்லை. பெருந்தன்மையான ஒரு முதலமைச்சராக நம்முடைய முதல்வர் இருக்கிறார்.
பொறுப்புணர்ச்சியுடன் பேசுங்கள்:
அதனால், இதை தொடர்ந்து அரசியல் ஆக்ககூடாது. இதை யார் செய்தாலும் அது சரியாக இருக்காது. இதை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் மக்கள் மற்றும் இளைஞர்கள் இதையெல்லாம் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள். தயவு செய்து பொறுப்புணர்ச்சியுடன் பேசுங்கள். நாங்கள் தவறான டேட்டாக்களை இதுவரை கொடுத்ததில்லை.”என்றார்.