இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கடந்தாண்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இருளர் சமுக மக்களின் காவல்துறையினர் அத்துமீறல்கள் குறித்து நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் வன்னியர் சங்கத்தின் அடையாளமாக உள்ள அக்னி கலசம் படத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி வன்னியர் சங்கம் மற்றும்  பாமகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். பாமக இளைஞரணி தலைவர் நடிகர் சூர்யாவிற்கு கடிதமும் எழுதிய நிலையில், படத்தின் காட்சியில் வைக்கப்பட்டு இருந்த அக்னி கலசம் மாற்றப்பட்டு லட்சுமி படம் வைக்கப்பட்டது.  இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 



எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தி வெளியிடக்கூடாது என கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட்த்தை சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து கோரிக்கை மனு விடுத்துவருகின்றனர். அதில் ஜெய்பீம் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்தவரை  ஜாதி வெறியர் போல சித்தரித்து, வன்னியர்கள் அடையாளமான அக்னி கவசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னிய சமூகத்தை சார்ந்தவர் என்றும், ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டி உள்ளனர்.


சகோதரத்துவம் ஆக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது, வன்னியர்களை கொச்சைப்படுத்த விதமாகவும், வன்முறையாளர்கள் ஆகும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தினை கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அனுமதிக்கக்கூடாது. என்பதை வலியுறுத்தி கரூர் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் வன்னியர் கட்சி நிர்வாகிகளுடன் கரூர்-கோவை சாலையில் உள்ள அஜந்தா திரையரங்கில் மேலாளர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.



பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அப்போது அவர் பேசிய போது ஜெய்பீம் திரைப்படத்தில் காவல் அதிகாரி போல் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயரை மாற்றி எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த குருமூர்த்தி அவர்களின் பெயரை வைத்து, வன்னியர் சமுதாய மக்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் போல் காட்சி வெளியாகி இருப்பதால் அந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா அந்த நிகழ்வுக்கு இதுவரை தார்மீக மன்னிப்பு கேட்காத நிலையில், அவர் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.



இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நாளை திரைப்படம் வெளியிட கூடாது என கரூர் திரையரங்கு மேலாளரிடம் மனு வழங்கி உள்ளோம். மேலும், அவர் தார்மீக மன்னிப்பு கேட்காத வரை அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் நிச்சயம் வன்னிய சமுதாயம் எதிர்க்கும். எனவும் தொடர்ந்து நாளை திரைப்படம் வெளியானால் எங்கள் நிர்வாகிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.