செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13  தேதி, போலி மதுபானம் (  கள்ளச்சாராயம் கலந்து தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் எனக்கு கூறப்படுகிறது ) குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

 

கள்ளச்சாராயம்:

 

அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்றொரு நபரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

அஞ்சலை ,சங்கர், சந்திரன், ராஜி, முத்து ,தம்பு ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில்  ஆறு பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்து ,  விசாரணை மேற்கொண்ட போலீசார், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.



 

எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்:

 

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல இவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் , இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்து, முறையான சிகிச்சை அளித்து உடனடியாக அவர்களை குணப்படுத்த வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். உடன் மேற்கு மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன்,  திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், வி.சோமசுந்தரம், டி.கே.எம். சின்னையா, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்,  அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட ஏராளமான ஆகிய அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

 



முன்னதாக விழுப்புரத்தில் செய்தியாளரை சந்தித்த பொழுது எடப்பாடி கே பழனிச்சாமி கூறுகையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரக்காணம் எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர் இது துயரமான சம்பவம் என்றும் விடியா ஸ்டாலின் அரசில் இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

 

கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரே செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 18 பேரின் விலைமதிக்க முடியாத உயிரை இழந்துள்ளதாக குற்றச்சாட்டினார். போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி விற்பனை செய்வதாகவும் அதிமுக ஆட்சியில் போலிமது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது இல்லை என்றும் இரண்டே நாளில் 1600 பேர் கைது செய்யப்படுகிறார்கள்.



 

ஸ்டாலின் பதவி விலக வேண்டும்:

 

மது விற்பனை அரசுக்கு தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதன் மூலம் தெளிவாகுவதாக கூறினார்.  உயிரிழப்பிற்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடுவதற்கு ஆளும் கட்சி துணை போவதாக இதனை தடுக்க கூறியிருந்தோம் அதனை செய்யவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கூறினார்கள்.  ஆனால் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது. 

 

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாகவும் இதற்கு துறை அமைச்சரை நீக்க வேண்டும் என்றும் அரசாங்கமே மது பானம் அருந்த ஆதரவு கொடுப்பதாகவும் திருமணம் விளையாட்டு மைதானத்தில் மது பானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மது விற்பனையில் செந்தில்பாலாஜி பத்து சதவிகிதம் லஞ்சம் பெறுவதாகவும் சாராய உயிரிழப்பு குறித்து சமூக போராளிகள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை அரசின் கைகூலியாக அவர்கள்  செயல்படுகிறவதாகவும், திமுகவின் கூட்டனியில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.