ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கலவரத்தை தூண்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் பேசிய சீமான், “ நீ பெரியார் கொடுத்த வெங்காயத்தை வீசு,நான் என் தலைவன் கொடுத்த வெடிகுண்டை வீசுகிறேன் என பேசினார். 

இதையடுத்து, சீமான் பேச்சு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக காவல்துறையிடம் ஈரோடு பெரியார் கூட்டமைப்பு புகார் அளித்தது. 

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.