9 மாவட்ட ஊரக உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட கவுன்சிலர்கள் (137/140)
திமுக கூட்டணி | 135 |
அதிமுக கூட்டணி | 2 |
பாமக | 0 |
அமமுக | 0 |
மக்கள் நீதி மய்யம் | 0 |
நாம் தமிழர் கட்சி | 0 |
தேமுதிக | 0 |
பிற | 0 |
ஒன்றிய கவுன்சிலர்கள் (1247/1381)
திமுக கூட்டணி | 903 |
அதிமுக கூட்டணி | 184 |
பிற | 4 |
பாமக | 34 |
அமமுக | 4 |
தேமுதிக | 1 |
நாம் தமிழர் | 0 |
மக்கள் நீதி மய்யம் | 0 |
விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 பேர் வெற்றி
விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் ஊராட்சி, வார்டு என இதுவரை 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் மேலும் பல இடங்களில் வெற்றிகிடைக்க வாய்ப்புள்ளதாக மக்கள் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்