தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. பெரும்பாலான பகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.


இந்த தேர்தலில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயின், விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர். இவர்களில் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சிலரின் விவரம் பின்வருமாறு:


1.மஞ்சு காசி - கள்ளக்குறிச்சி


2.ராதா முருகன் - விழுப்புரம்


3. வினோத்குமார் - திருப்பத்தூர்


4. ராஜ்குமார் - கள்ளக்குறிச்சி


5. பாலகிருஷ்ணன் - கள்ளக்குறிச்சி


6. சேரன் - ராணிப்பேட்டை


7. ராஜேஷ்-ராணிப்பேட்டை


8.நாகலிங்கம்-ராணிப்பேட்டை


9.சசிகலா-கள்ளக்குறிச்சி


10.தமிழ்செல்வி-தென்காசி


11.லோகு-செங்கல்பட்டு


12.ரீனா புருஷோத்தமன்-செங்கல்பட்டு


13.மணிமேகலை-கள்ளக்குறிச்சி


14.வினோத்-விழுப்புரம்


15. அன்பு-மதுரை(இடைதேர்தல்)


16. சுரேஷ்-காஞ்சிபுரம்


17. சிம்பு-காஞ்சிபுரம்


18. கற்பகம்- திருப்பத்தூர்


19. எழிலரசி சிவா- காஞ்சிபுரம்


20. மோனிஷா மணிகண்டன்- கள்ளக்குறிச்சி


21. இலக்கியா- சில்லூர் ஒன்றியம்


22. சின்ராஜ்- சில்லூர் ஒன்றியம்


23. அமுல்பிரியா


24. பிரபு - காஞ்சிபுரம் மேற்கு


25. சசிகலா பழனி - கள்ளக்குறிச்சி .


26. மணிமேகலை கள்ளகுறிச்சி.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் விஜயும் பல முறை தனக்கு அரசியலில் ஈடுபாடு உள்ளதாக மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அவருக்கும், அவரது தந்தைக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது. இதனால், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் 48 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வருங்காலங்களில் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம்தான் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.