தமிழ்நாட்டில் இரு கட்டமாக நடைபெறவிருக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில், எஞ்சியுள்ள பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள வார்டு வாரியான ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கையை வைத்து, கூட்டணிகளுக்கு அதிமுக இடம் ஒதுக்கியுள்ளது தெரிகிறது. அது எந்ததெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கியிருக்கிறது என்பது அடுத்தடுத்து அக்கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கையை வைத்து அறியலாம். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இறுதி செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலும், வார்டு ஒதுக்கீடும் நடந்துள்ளது. 


 


அதிமுக தலைமை அறிவித்துள்ள  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த அறிவிப்பு இதோ:


 


ஊரக உள்ளாட்சி அமைப்புகள் - தற்செயல் தேர்தல் - 2021 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் பட்டியல்


வருவாய் ரீதியான 28 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் 9.10.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.













உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி... கீழே உள்ள லிங் க்ளிக் செய்து அறியலாம்!


உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!