தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. இததொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பிற்கு பிறகு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


“ அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது அமைச்சர் பெரியகருப்பண் உட்காருடா என்று மரியாதைக்குறைவாக பேசினார். அவர் சற்றும் மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பெரியகருப்பணை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.




துணைவேந்தர் நியமன மசோதா குறித்து சட்டமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் சட்ட முன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப தி.மு.க. இரட்டை வேடம் போடுவதைத்தான் காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உட்பட்டுதான் அவர்கள் செயல்பட முடியும். அதற்கு புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.


இந்திய அரசியல் சட்டத்தின்படி ஆளுநர்கள்தான் துணைவேந்தர்கள் நியமிக்க வேண்டும் என்று இல்லை. ஆனால், பல்வேறு கருத்துகள் உள்ளன.” என்றார்.




அப்போது, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கூறியதாவது, நாங்கள் வெளிநடப்பு செய்தததற்கு காரணம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்சனம் செய்த காரணம்தான். அப்போது, அவையில் இருந்த முதல்வர் அவரை கட்டுப்படுத்தாமல் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து சொன்ன காரணத்தினால்தான் வெளிநடப்பு செய்தோம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண