தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம், ஆண்டுதோறும் ஏப்.24ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் செங்காடு ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பெருந்தகை, ஊரக வளர்ச்சி முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மற்றும் செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் செஞ்சுராணி கவசகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு பெண் எழுந்து, " எங்கள் ஊரில் பலரும் கிட்னி பெயிலியர்" பிரச்சினை இருக்கிறது. எப்படி இந்த பிரச்சினை வந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை தண்ணீர் பிரச்சினையா எனப் புரியவில்லை என்றார். அதற்கு போதிய மருத்துவமனை வசதிகள் இருக்கின்றனவா என்று முதல்வர் கேட்டார்.
உடனே மாவட்ட ஆட்சியரை அழைத்து விவரம் கேட்டார், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மைக்கை கொடுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து எடுத்து வையுங்கள் என தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ஒரே பகுதியில் இருந்து நிறைய நபர்கள் சிறுநீரக பிரச்சனை குறித்து சென்னை தலைமை மருத்துவமனைக்கு சென்றதால் உடனடியாக அங்கிருந்த குழு, இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இங்கிருந்த தண்ணீர் மற்றும் காற்றை பரிசோதனை மேற்கொண்டு எந்தவித பிரச்சனை இல்லை என அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாக என தெரிவித்துள்ளனர். மேலும் சிலரும் இதே பிரச்சினை குறித்து முதல்வரிடம் பேசிய பொழுது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடையே தமிழக முதல்வர் உறுதியளித்தார்.
இக்க்கிராமத்தில் ஒரே தெருவில் 8 பேருக்கு அடுத்தடுத்து சிறுநீரக கோளாறு, ஏற்பட்டுள்ளது. முழுமையாக 7 நபர்களுக்கும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தற்போது செயல் இழந்துள்ளது. இதன் காரணமாக அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுநீரகம் செயல் எழுந்தவர்கள், வாரம் இருமுறை அனைவரும் டயாலிசிஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.