சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். நவம்பர் மாதம் 27ஆம் தேதி இலங்கையில் ஈழத் தமிழர் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூறும் நாளாக "மாவீரர் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்டம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாவீரர் தினம் கொடியினை ஏற்றினார். பின்னர், மறைந்த வீரர்களுக்கு தியாகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



அதன்பின் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றிய சீமான், ஒரு நிலப்பரப்பை பிடிப்பதற்காக பல பேரை கொன்று குவித்த நெப்போலியனும் அலெக்சாண்டரும் மாவீரர்கள் அல்ல தன் நிலத்தின் உரிமைக்காக போராடியவர்களே மாவீரர்கள் என்றார். சாதிப் பெருமை மதப் பெருமைகளில் சாக்கடையில் தள்ள வேண்டும் என்று தெரிவித்த சீமான் உலகங்களும் வரலாற்றுச் சக்கரம் சுதந்திரப் போராட்டங்களை சுற்றி இயங்குவதாகவும் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்டது என்றும் தெரிவித்தார். உடலில் காயப்பட்டால் முதலில் கண்கள் ஆளும் உலகத்தில் எங்கு காயப்பட்டாலும் முதலில் தமிழ் மண் அழும் என்றும் சீமான் குறிப்பிட்டார்.


அதிகாரம் நம் கையில் வந்து விட்டால் வட நாட்டவருக்கு வருமானத்திற்கான உரிமை அளிக்கப்படுமே தவிர வாக்குரிமை அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். திருவள்ளுவர் வாக்கின்படி ஆட்சி செய்தாலே நாடு செழிக்கும் ஆனால் அவருக்கு சிலை திறப்பவர்களும், மண்டபம் அமைப்பவர்களும் திருக்குறளை பின்பற்றுவதில்லை என்றார். தமிழகத்தில் ஏற்கனவே நீர் நிலைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மலைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் மலை வழங்கி மகாதேவன் என்று பாட்டி குறிப்பிட்ட பூதங்கள் தற்பொழுது தமிழகத்தில் உலவி வருவதாகவும் தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தமிழ் மொழி, உலகில் எந்த ஒரு மொழியும் இன்றி தனித்து இயங்கும் ஒரே மொழி உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழிதான் என்றார். உலகில் உள்ள மற்றவர்கள் தாய் மொழியில் பேசுகின்றனர், ஆனால் தமிழர்கள் மட்டுமே மொழிகளின் தாய் மொழியில் பேசுகிறோம். வீரம் என்பது ஒருவன் 100 பேரை வெட்டிக் கொள்வதல்ல, தன் நாட்டை தவிர்த்து பிற நாட்டிற்குச் சென்று போர் புரிந்து, அங்குள்ள மக்களை கொன்று குவித்து, நிலப்பரப்பை விரிவாக்கம் செய்வதில்லை வீரம். தன் தாய் நிலத்தை அந்நியன் ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக போரிட்டு தாய் நிலத்தை காப்பது தான் வீரம் என்றார். தொடர்வண்டியில் ஒரே நாளில் பதினைந்தாயிரம் பேர் பதட்டம் அடைகின்றது.


ஈழத்தில் நடந்தது இங்கே நடக்கப் போகிறது. வடநாட்டில் இருந்து வருபவர்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியத்தை கொடுத்து அனுப்பி விட வேண்டும். அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தால் நாளை அதிகாரம் அவர்கள் கையில் செல்லும். நாம் அனைவரும் அதிகாரம் அற்ற அடிமைகளாக மாறுவோம். இவை வரலாற்றில் நடந்துள்ளது, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஈழநாடு ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு அல்ல, ஒட்டுமொத்த உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கான நாள். என்னை பார்க்கும்போது நாம் தமிழர் என்று முழக்கம் இட வேண்டாம். இனி 'தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க' என முழக்கம் இட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.