கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் தனது மக்கள் நீதிமய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பதிவிட்டுள்ளதாவது, மேடு பள்ளம், இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூகநீதி அனைவருக்கும் வழங்கப்படும். ஏழை, எளியோருக்கு ஏற்றம் உறுதி செய்யப்படும். உலகத் தரமான மருத்துவம் உறுதி செய்யப்படும். அரசு வேலை வாய்ப்புகளில் 69 சதவீதம் உறுதி செய்யப்படும்.
வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும். முதியோர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழகத்தில் யாரும் அனாதை இல்லை என்பது உறுதி செய்யப்படும். வறுமைக்கோட்டில் இருந்து செழுமைக் கோட்டாக மாற்றப்படும்.
அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்படும். வேறுபாடு களைந்த அரசியல் நீதி உறுதி செய்யப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள் அரசின் திட்டங்களில் பங்குதாரர்களாக சேர்க்கப்படுவார்கள். ஆட்சி மொழி, கல்வி ஆராய்ச்சி மொழி, நீதிமொழி, வேலைமொழியாக தமிழ் உறுதிசெய்யப்படும். இறக்குமதிக்கு இணையாக உள்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யப்படும். வரி குறைப்பு, நீடித்த வளர்ச்சி, வரிக்கு நிகரான வருமானம் ஆகியவற்றால் தமிழகம் கடனில்லா மாநிலமாக மாற்றப்படும்.