தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் நிறைவு பெற்றுவிட்டது.




சட்டசபை தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டசபை தேர்தலுக்காக விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பிரச்சார தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.